சிங்கப்பூரில், டெலிவரி ஊழியர் ஒருவர் பொட்டலத்தைக் கீழே வீசியெறிந்து, காலை வைத்துத் தள்ளுவது போன்ற அலட்சியத்தைக் காணொளி காட்சிகள் பதிவு செய்துள்ளன.
புக்கிட் பாத்தோக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வெளியே நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொட்டலத்தில் அடங்கியிருந்த கண்ணாடிக் குடுவை உடைந்து சேதமாகியுள்ளது.
பொட்டலத்தைப் பெற்றுக்கொண்ட நபர் இந்தக் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
டெலிவரி ஊழியர் பொட்டலத்தைச் சரியாகக் கையாளாமல் அலட்சியமாகப் போட்டதையும் அதைத் தொடர்ந்து காலை வைத்துத் தள்ளியதையும் அந்தக் காணொளி தெளிவாகக் காட்டுகிறது.
பொட்டலத்தை எடுப்பதற்கு அந்நபர் வெளியே வருவது காணொளியின் இறுதியில் இடம்பெறுகிறது.
J&T நிறுவனத்தில் புகார் கூறியுள்ள அந்நபர், இந்தச் செயலால் தாம் ஏமாற்றம் அடைந்ததாகவும் கோபமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
படம்: Stomp StraitsTimes