சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் பணம் செலுத்தும் முறையில் சில தடைகள் இருந்து வந்தது. ஆனால் தற்போது QR குறியீட்டை ஸ்கேன் செய்து Wise செயலி மூலம் கட்டணம் செலுத்த முடியும்.
‘Scan-to-pay’ எனப்படும் இந்த ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.
இதுபோன்ற பிற செயலிகளைப் போலவே, Wise செயலியும் வெவ்வேறு நாடுகளின் நாணயங்களில் பணம் செலுத்துவதை அனுமதிக்கிறது.
பயணிகள் பணம் செலுத்தும்போது, அன்றைய சந்தை விகிதத்தின்படி சிங்கப்பூர் டாலர்கள் அல்லது வேறு நாணயமாக மாற்றப்பட்டு, அந்தத் தொகை அவர்களின் Wise கணக்கிலிருந்து எடுக்கப்படும். பணம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன், செயலியிற்கான கட்டணம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையைக் காண்பிக்கும்.
கார்டுகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படாத உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற இடங்களில் இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு முன்னர் இருந்த கட்டணச் சிக்கல்களைத் தீர்க்க இந்தப் புதிய அம்சம் உதவுகிறது. இப்போது, அவர்கள் Wise செயலியை ஸ்கேன் செய்வதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எளிதாக பணம் செலுத்தலாம்.
Wise செயலியை எப்படி பயன்படுத்துவது
சர்வதேச பணப் பரிமாற்றங்கள் மற்றும் நாணய மேலாண்மைக்கு Wise செயலியைப் பயன்படுத்த, எளிமையாக்கப்பட்ட வழிமுறைகள் கீழே குறிப்பிடப்படுகிறன.
- உங்கள் மின்னஞ்சல் அல்லது ஒரு சமூக ஊடகக் கணக்கைப் பயன்படுத்தி Wise இணையதளம் அல்லது செயலி மூலம் பதிவு செய்யலாம். நீங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் மற்றும் பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை வைத்து உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும்.
- அடுத்து, நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை அல்லது பெறுநர் பெற வேண்டிய தொகையை உள்ளிட வேண்டும். இது கட்டணம் மற்றும் எதிர்பார்க்கப்படும் விநியோக நேரம் உள்ளிட்ட விவரங்களைக் காண்பிக்கும்.
- உங்கள் Wise கணக்கில் உள்நுழைந்து, நீங்கள் அனுப்பும் தொகை அல்லது பெறுநர் பெற வேண்டிய தொகையை உள்ளிட்டு, பெறுநரின் வங்கி விவரங்களைச் சேர்க்க வேண்டும். பின்னர் உங்கள் கட்டண முறையை (வங்கிப் பரிமாற்றம் அல்லது அட்டை கட்டணம் போன்றவை) தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பல நாணயங்களில் பணம் பெற உங்கள் Wise கணக்கு விவரங்களை அனுப்புபவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கணக்கில் 50 க்கும் மேற்பட்ட நாணயங்களை வைத்திருக்கவும், பரிமாறவும் முடியும்.
Wise செயலியின் சிறப்பம்சங்கள்
Wise பரிமாற்றங்கள் அவற்றின் விரைவான பணப் பரிமாற்றத்திற்கு பிரபலமானவை ஆகும். இவற்றில் பாதியிலும் மேற்பட்டவை உடனடியாக அனுப்பப்படுகின்றன.
மற்றவை பெரும்பாலும் 24 மணி நேரத்திற்குள் பணப் பரிமாற்றப்பட்டு விடும். இந்த செயல்முறை எளிதானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல நாணயங்களில் நிதியை வைத்திருக்கவும், சர்வதேச கட்டணங்களை செலுத்தவும், உலகளவில் Wise டெபிட் கார்டு மூலம் செலவு செய்யவும் Wise உங்களை அனுமதிக்கிறது. செயலி அல்லது Wise இணையதளம் மூலம் பணம் அனுப்பும் செயலைக் கண்காணிக்கலாம். தேவைப்படின் வாடிக்கையாளர் ஆதரவும் கிடைக்கிறது.
Wise செயலி பணம் அனுப்புவதற்கும், இருப்பு வைப்பதற்கும் பாதுகாப்பானதா?
Wise செயலி மூலம் பணம் அனுப்புவது, இருப்பு வைப்பது, சர்வதேச அளவில் பண பரிமாற்றங்கள் செய்வது ஆகியவை பாதுகாப்பானவை. வங்கியைப் போன்றே இதுவும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது, இருப்பினும் இது ஒரு வங்கி அல்ல. பல்வேறு நாடுகளில் Wise கடுமையான நிதி ஒழுங்குமுறைகளின் கீழ் இயங்கி, உரிய உரிமங்களைப் பெற்றுள்ளது.
இந்தச் செயலி பலவித பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில: 2-factor authentication, மோசடியைத் தடுப்பதற்கான சிறப்பு தொழில்நுட்பம், பரிவர்த்தனைகள் குறித்த உடனடி அறிவிப்புகள், முதல்தர நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் நிதியைப் பாதுகாத்தல். இவை அனைத்தும் உங்கள் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கின்றன.
Wise கணக்குகள் FDIC காப்பீடு செய்யப்படாவிட்டாலும், நிறுவனத்தின் நிதியிலிருந்து வாடிக்கையாளர்களின் நிதியைத் தனியாகப் பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதனால் சர்வதேச அளவில் பணத்தை நிர்வகிக்கவும் பரிமாறவும் Wise நம்பகமான தேர்வாக விளங்குகிறது.