உணவு பதப்படுத்தும் மற்றும் பேக்கேஜிங் நிறுவனமான டெட்ரா பேக், ஜூரோங்கில் உள்ள தனது ஆலையை மூட உள்ளது.
இதனால் சுமார் 300 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
சந்தை நிலவரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, அடுத்த 12 மாதங்களில் சிங்கப்பூரில் உள்ள தனது பேக்கேஜிங் உற்பத்திப் பிரிவை, அண்டை நாடுகளில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுடன் இணைக்கப் போவதாக டெட்ரா பேக் நிறுவனம் பிப்ரவரி 27 அன்று தெரிவித்தது.
சிங்கப்பூர் டெட்ரா பேக் ஊழியர்கள் உணவு பானம் மற்றும் சார்பு தொழிலாளர் சங்கத்தின் (Food Beverage and Dependent Workers Union) உறுப்பினர்களாக இருப்பினும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவ நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிறுவனம் சலுகைகளுடன் கூடிய ஆதரவுத் திட்டங்களை வழங்கும்.
இங்கு நிர்வாகம், மனிதவளம் மற்றும் விளம்பரம் போன்ற வணிகச் செயல்பாடுகளுக்காக, டெட்ரா பேக் நிறுவனம் தனது அலுவலகத்தை சிங்கப்பூரில் தொடர்ந்து வைத்திருக்கும்.