சிங்கப்பூரில் பணிபுரியும் தங்களது 4,600 ஊழியர்களுக்கு, அவர்களின் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க உதவும் விதமாக, OCBC வங்கி ஒவ்வொருவருக்கும் $1,000 நிதி உதவி அளிக்கிறது.
உலகளவில் 14,000 ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் $9 மில்லியன் மொத்த நிதியுதவியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
OCBC வங்கியின் கிளைகளான ‘Bank of Singapore’, ‘OCBC Securities’, ‘Great Eastern Holdings’ முதலானவற்றில் பணிபுரியும் ஊழியர்களும் இதில் அடங்குவர்.
19 சந்தைகளில் பணிபுரியும் வங்கியின் 40% க்கும் அதிகமான ஊழியர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
பிப்ரவரி முதல் மார்ச் 2024 வரையிலான காலக்கட்டத்தில் ஊழியர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
சிங்கப்பூரில், புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் என சுமார் 40% தொழிலாளர்களுக்கு OCBC யின் இந்த உதவி பலனளிக்கும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க நிதி உதவியளிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 2023இல் சிங்கப்பூரின் தேசிய ஊதியக் குழு சிபாரிசு செய்திருந்தது.
குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு one-off payment வழங்குமாறு, தேசிய ஊதியக் குழு முன்மொழிந்திருந்தது,
அதை சிங்கப்பூர் அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. சிங்கப்பூருக்கு வெளியே உள்ள OCBC ஊழியர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி அந்தந்த நாடுகளின் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சரிசெய்யப்படும்.