லசாடாவில் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், பேச்சுவார்த்தைகளின் மூலம் சாதகமான முடிவுக்கு வந்துள்ளனர்.
கம்பெனி மற்றும் தொழிற்சங்கத்திற்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஊழியர்களுக்கு மேம்பட்ட ஆதரவளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Lazada, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) மற்றும் உணவு மற்றும் பான பணியாளர் சங்கம் (FDAWU) ஆகியவை ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் நட்பு ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் தகுதி பெற்ற தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஆதரவை உறுதி செய்கிறது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் புதிய வேலைகளைக் கண்டறிய உதவுவதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
கூடுதலாக, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.
இந்த பயிற்சி NTUC இன் வேலைவாய்ப்பு மற்றும் வேலைத் திறன் நிறுவனமான e2i உதவியுடன் நடத்தப்படும். இது உடனடி உதவி மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எதிர்கால நலனுக்கும் உதவும்.
இந்த முயற்சியின் நோக்கம் அவர்களின் மாற்றத்தை இலகுபடுத்துவதும் புதிய வாய்ப்புகளுக்கான திறன்களை மேம்படுத்துவதும் ஆகும்.
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூரில் வேலை தேடுவது எப்படி
வெளிநாட்டிலிருந்து கொண்டு சிங்கப்பூரில் வேலை தேடுவது கொஞ்சம் சிரமமான காரியம் தான். இருந்தாலும், சரியான திட்டமிடலும், எங்கு தேட வேண்டும் என்ற தெளிவும் இருந்தால் உங்களது திறமைக்கும், அனுபவத்துக்கும் ஏற்ற வேலையை அங்குப் பெற முடியும்.
சிங்கப்பூர் வேலைவாய்ப்புச் சந்தை மிகவும் போட்டி நிறைந்தது. ஆனால், பலவிதமான தொழில்களும் வாய்ப்புகளும் நிறைந்த இடம். அதனால் தான் திறமையானவர்கள் பல நாடுகளிலிருந்தும் அங்கு வேலை தேடி வருகிறார்கள்.
இணையதள வேலைவாய்ப்புத் தளங்கள் மற்றும் தொழில்முறை வலைப்பின்னல்கள்
இந்த டிஜிட்டல் யுகத்தில் வேலை தேடுவது என்பது முன்பைவிடச் சுலபம். JobsDB, JobStreet, MyCareersFuture.sg போன்ற சிங்கப்பூருக்கென பிரத்யேகமான இணையதளங்களில் பலவிதமான வேலைகள் பற்றிய விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
நீங்கள் எந்தத் துறையில் வேலை தேடுகிறீர்களோ, உங்களிடம் எத்தனை வருட அனுபவம் உள்ளதோ அதற்கேற்ப உங்கள் தேடுதலைச் சுருக்கிக்கொள்ள (filter) முடியும்.
இது போன்ற தளங்களுக்கு மேலாக, LinkedIn போன்ற தொழில்முறை வலைப்பின்னல் தளங்களும் மிகவும் பயனுள்ளவை.
இவற்றில் வேலை தேடுவது மட்டுமல்லாமல், சிங்கப்பூரில் இருக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் உங்கள் துறையைச் சேர்ந்தவர்களுடன் நேரடியாகவும் தொடர்பு கொள்ள முடியும். உங்கள் ‘புரொஃபைலில்’ சிங்கப்பூரில் குடிபெயர விரும்புவதையும் அங்கு வேலை தேடுவதையும் பற்றிக் குறிப்பிட மறக்காதீர்கள்.
virtual நெட்வொர்க்கிங் மற்றும் ஆட்சேர்ப்பு நிகழ்வுகள்
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, ரிமோட் வேலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், டிஜிட்டல் தகவல் பரிமாற்றங்களும் அதிகம் நடக்கின்றன.
இந்த முன்னேற்றத்தைப் பயன்படுத்தி பல நிறுவனங்களும், தொழில்முறை அமைப்புகளும் மெய்நிகர் வேலைவாய்ப்பு முகாம்களையும், இதர ஆன்லைன் நெட்வொர்க்கிங் நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன. இவற்றில் நீங்கள் பங்கேற்பதன் மூலம், சிங்கப்பூர் வேலைவாய்ப்புச் சந்தையைப் பற்றிய தகவல்களைப் பெற முடியும், மேலும் சிங்கப்பூரில் பணிபுரிவோரை நேரடியாகச் சந்திக்க முடியும்.
அடுத்ததாக, என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதையும் அறிய முடியும். இது போக, சிங்கப்பூர் சார்ந்த தொழில்முறை குழுக்கள் மற்றும் மன்றங்களில் ஆன்லைனில் உறுப்பினராகுங்கள்.
இதன் மூலம், வேறு நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்திருப்பவர்களிடம் பழகலாம், அவர்கள் எப்படி வேலை தேடினார்கள், அவர்களது அனுபவங்கள் என்னென்ன என்பதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
இறுதியாக, வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூரில் வேலை தேடுவது என்பது கடினமானது தான். ஆனால், வேலை தேடும் முறையிலும் உத்தியிலும் சற்றுக் கூடுதல் சாமர்த்தியம் காட்டினால், இதைச் சாதிக்க முடியும்.
இணையதள வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மெய்நிகர் நெட்வொர்க்கிங் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுங்கள். வாய்ப்புகளைத் தவறாமல் நாடுங்கள்.