பிப்ரவரி 10 ஆம் தேதி முகநூலில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் பதிவான விபரீத சாலைச் சம்பவத்தில் ஈடுபட்ட, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரின் ஓட்டுநரை மலேசிய காவல்துறை தேடி வருகிறது.
ஜோகூரில் உள்ள நெடுஞ்சாலையில் சிவப்பு மிட்சுபிஷி லான்சர் மற்றும் கருப்பு டொயோட்டா கார்களுக்கு இடையே நடந்த மோதலை அந்த வீடியோ காட்டுகிறது.
லான்சர் காரின் ஓட்டுநர் கோல்ஃப் மட்டையை வைத்துக்கொண்டு இரண்டு நபர்களைத் தாக்க முயற்சிக்கும்போதும், டொயோட்டா காரின் பின் கண்ணாடியை சேதப்படுத்தும்போதும் இந்த மோதல் தீவிரமடைகிறது.
இதில் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அத்துடன் இந்த சம்பவம், சமூக வலைத்தளத்தில் பரவலாக இது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.
மலேசியாவில் சிங்கப்பூரர்கள் ஆணவமாக நடந்துகொள்வதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், இந்த விஷயம் தேசியம் சார்ந்தது அல்ல, சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட ஆக்ரோஷமான நடவடிக்கைகள் குறித்தே என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டினர்.
அவசர வழித்தடத்தை தவறாகப் பயன்படுத்தியது, சொத்து சேதம், மற்றும் பொதுமக்களுக்குள் ஏற்பட்ட சலசலப்பு ஆகியவை இச்சம்பவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குறும்புத்தனம் விளைவித்தல், தகவல் தொடர்பு வலையமைப்புக்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் அவசர வழித்தடத்தில் வாகனத்தை ஓட்டுதல் உட்பட பல்வேறு மலேசிய சட்டங்களின் கீழ் இந்த வழக்கை முஆர் மாவட்ட காவல்துறை விசாரித்து வருகிறது.
மேலதிக விசாரணைக்காக மிட்சுபிஷி காரின் ஓட்டுநரை காவல்துறை தேடி வருகிறது.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான ஊகங்களைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், எந்தவொரு குற்றச் செயலுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
படம்: Screengrab/Facebook/Apple Kenzo