கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சிங்கப்பூரில் Shanghai Chong Kee Furniture and Construction நிறுவனத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிறுவனம் சம்பளம் கொடுக்கவில்லை.
இதனால் ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நிறுவனம் தற்போது பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பள பாக்கியை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு ஊழியர்களின் போராட்டத்தை அடுத்து, சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டது.
குற்றம்சாட்டப்பட்ட நிறுவனம், பாதிக்கப்பட்ட 268 ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய சம்பள பாக்கியில் ஒரு பகுதியை 2022 அக்டோபர் மாத இறுதிக்குள் வழங்கியுள்ளது.
மீதமுள்ள பாக்கித் தொகையையும் நிலுவையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்தில் ஏமாந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, அவர்களுடைய நிலுவைச் சம்பளத்தை பெற்றுத்தர Tripartite Alliance for Dispute Management (TADM) என்ற அமைப்பும், தொழிலாளர் நல அமைச்சகமும் செயற்பட்டு வருகிறன.
ஏற்கனவே காப்பீட்டு பிணை முறிச் சீட்டுகளைப் பயன்படுத்தி 3,00,000 சிங்கப்பூர் டாலர்களுக்கு (சுமார் ₹2 கோடி இந்திய மதிப்பில்) மேல் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்க TADM முன்வந்து உதவியுள்ளது.