சிங்கப்பூர் வருமான வரி ஆணையம் (IRAS) கண்டறிந்ததாவது, தானியங்கி பதிவுத் திட்டத்தின் (AIS) கீழ் தங்கள் ஊழியர்களின் வருமானத்தைப் சமர்ப்பிக்க வேண்டிய 10% முதலாளிகள் அதை சரியான நேரத்தில் செய்யத் தவறிவிட்டனர்.
பலமுறை நினைவூட்டல்கள் அனுப்பியும், இந்த முதலாளிகள் காலக்கெடுவை மீறினர்.
இதன் விளைவாக, 2023 ஆம் ஆண்டில் 900க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மொத்தம் $1 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக அபராதம் விதிக்கப்பட்ட தொழில்களில் உணவகங்கள், காபி கடைகள், கட்டுமான நிறுவனங்கள், சில்லறை விற்பனையகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் ஆகியவை அடங்கும்.
மார்ச் 1க்குள் தங்கள் ஊழியர்களின் வருமான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று IRAS மீண்டும் அனைத்து முதலாளிகளுக்கும் நினைவூட்டியுள்ளது.
குறிப்பாக AIS திட்டத்தில் உள்ள நிறுவனங்கள் அல்லது ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இதை செய்யத் தவறினால் சட்டத்தை மீறிய குற்றமாகும்.
தங்கள் ஊழியர்களின் சம்பளத் தகவலைச் சரியான நேரத்தில் சமர்ப்பிக்காமல் இருப்பது குற்றமாகக் கருதப்படுகிறது , மேலும் இதை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதை IRAS தெளிவுபடுத்துகிறது.
இது அனைத்து ஊழியர்களின் வருமானமும் துல்லியமாகவும் சரியான நேரத்திலும் பதிவாகிறது என்பதை உறுதி செய்வதற்கான முயற்சியாகும்.