இணையத்தில் போலி நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகளை விற்று 500க்கும் மேற்பட்டோரிடம் S$223,000க்கும் அதிகமாக மோசடி செய்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு ஆணும், மூன்று பெண்களும் (வயது 18 முதல் 27 வரை) இந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
டெய்லர் ஸ்விஃப்ட், கோல்ட்ப்ளே போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகள் விற்பனை என்ற பெயரில் இந்த மோசடி அரங்கேறியுள்ளது.
டெலிகிராம், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் நுழைவுச்சீட்டுகளை விற்கிறோம் என்று இந்த மோசடி கும்பல் விளம்பரம் செய்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளும் போது, போலி நுழைவுச்சீட்டுகளையோ அல்லது போலியான வாங்கியதற்கான ரசீதுகளையோ காட்டி நம்ப வைத்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்டவுடன், அந்த நுழைவுச்சீட்டுகளை அனுப்பாமல் ஏமாற்றுவார்கள், அல்லது அனுப்பும் நுழைவுச்சீட்டுகள் போலியாக இருக்கும்.
நிகழ்ச்சி நாளன்று தான் ஏமாற்றப்பட்டதை பலர் உணர்வார்கள்.
கைது செய்யப்பட்ட நான்கு பேருடன் மேலும் பதினொரு பேர், ஒரு இளம் வயது சிறுவன் உட்பட, விசாரணையில் உள்ளனர்.
இவர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை மோசடி கும்பலுக்கு கொடுத்தும், இணைய கணக்குகளை தவறான தேவைகளுக்கு வழங்கியும் உடந்தையாக இருந்துள்ளனர்.
ScamShield போன்ற செயலிகளைப் பயன்படுத்தவும், உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு இரட்டை அங்கீகாரம் (two-factor authentication) போன்ற பாதுகாப்பு முறைகளை வைத்துக் கொள்ளவும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.