தன் இறப்புக்குப் பிறகான சடங்குச் செலவுகள் மற்றும் சட்டக் கட்டணங்கள் போன்றவைக்குக் கட்டணம் கேட்டு மற்றொரு பெண்ணை ஏமாற்றிவிட்டதாக சிங்கப்பூர் பெண்ணொருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் அந்த பெண் S$160,000 இழந்தார். வாரிசு மூலம் சொத்து சேர இருப்பதாக ஆசை காண்பித்து இந்த மோசடி அரங்கேறியுள்ளது.
தன்னை சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் (LawSoc) பிரதிநிதி என்று முறைகேடாகக் கூறிக் கொண்டது மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றுக்காக அந்நபர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இரு பெண்களுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஏமாற்றுக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
அத்துடன், சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் பிரதிநிதியாக, தவறாக நடித்ததற்காகவும் தண்டனை வழங்கப்படலாம்.
அதிகபட்சமாக ஆறு மாத சிறை அல்லது S$25,000 அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதுபோன்ற குற்றங்களை மீண்டும் செய்தால், தண்டனைகள் இன்னும் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.