சீனப் புத்தாண்டிற்கு முன்பாக சாங்கி பாய்ண்ட் படகுத்துறையில் 57 வயது மனிதர் ஒருவரின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அந்த மனிதர் வெவ்வேறு இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், பின்னர் தண்ணீரில் குதித்து மேலே எழும்பாமல் போனதாகவும் அந்தப் படங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
சிறிது நேரம் கழித்தும் அவர் மேலே எழும்பாததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நபரைத் தேடும் பணி இரவு வரை தொடர்ந்தது. தேடுதலை எளிதாக்க வெளிச்ச விளக்குகளும் பயன்படுத்தப்பட்டன. புகைப்படம் ஒன்றில் அந்த நபரின் செருப்புகள் மற்றும் ஒரு பீர் கேன் ஒன்று காணப்பட்டது.
லோரோங் பெக்கோங் அருகே, அதாவது சாங்கி பாய்ண்ட் படகுத்துறை உள்ள இடத்தில், பிப்ரவரி 9 ஆம் தேதி பிற்பகல் 4:15 மணியளவில் ஒருவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக குறிப்பிடப்படுகிறது.
சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையத்தின் ரோந்துப் படகு மற்றும் SCDF படகு ஆகியவை நீரில் மூழ்கிய நபரைத் தேடுவதற்காக அனுப்பப்பட்டன.
மறுநாள் அவர் கண்டுபிடிக்கப்பட்டார், அத்துடன் அவர் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்தில் வேறு யாருக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.