2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் சுயசேவை பாதைகள் மூலமாக சிங்கப்பூர் நுழைய இயலும் என்று சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
இந்தப் பிரத்யேக பாதைகளின் எண்ணிக்கை, பயணிகளின் கூட்ட நெரிசல் மற்றும் தேவையின் அடிப்படையில் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.
நாடாளுமன்ற விவாதத்தின் போது, சிங்கப்பூர் நுழைவு மற்றும் வெளியேற்றம் எளிதாகவும் விரைவாகவும் இருக்கும் பொருட்டு இந்த புதிய சுயசேவை பாதைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. சிங்கப்பூரிலிருந்து புறப்படும்போது கடவுச்சீட்டை காண்பிக்க வேண்டியதுகூட இல்லை.
மேலும், குடும்பங்களுக்கும் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கும் குடிவரவு பகுதி வழியாக எளிதில் செல்லும் வகையில் சிறப்பு உதவிப் பாதைகள்’ அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற சேவையை அளிக்கும் உலகின் முதல் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று ஆகும். பயணம் செய்வதை மக்களுக்கு வசதியாக்கவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
பயணிகளின் அதிகரிக்கும் எண்ணிக்கையை சமாளிக்க, 2023 ஆம் ஆண்டில் 160க்கும் மேற்பட்ட புதிய சுயசேவை பாதைகள் சேர்க்கப்பட்டன.
மேலும் 230 பாதைகள் 2024 இல் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் உள்பட உலகம் முழுவதிலுமுள்ள 60 நாடுகளில் இருந்து ஏற்கனவே இந்தப் பாதைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த விரிவாக்கம் உதவும்.