சிங்கப்பூரின் Economic Development Board ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்னவென்றால், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் வான்வெளித் துறையில் சுமார் 2,500 புதிய வேலைகள் உருவாக்கப்பட உள்ளன.
இதில் இயந்திரங்களை இயக்குபவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலகப் பணிகள் வரை போன்ற வேலைகள் இருக்கும்.
சிங்கப்பூரில் 130க்கும் மேற்பட்ட Aerospace நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த துறையில் 16% வளர்ச்சியை சிங்கப்பூர் கண்டுள்ளது.
இத்தகைய வலுவான வளர்ச்சிக்கு ஏற்பவே நிறுவனங்கள் அதிக ஊழியர்களை பணியமர்த்துகின்றன. சமீபத்திய சவால்களையும் தாண்டி Aerospace துறை மீண்டு வருகிறது.
குறிப்பாக, வானூர்தி பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளில் சிங்கப்பூர் உலகளாவிய சராசரியை விட வேகமாக வளர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த துறையில் கிட்டத்தட்ட 3,000 வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக, அடுத்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் சுமார் $556 மில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை வான்வெளி நிறுவனங்கள் செய்ய உறுதியளித்துள்ளன.
மேம்பட்ட உற்பத்தி மற்றும் நிலையான திட்டங்களில் இந்த முதலீடுகள் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.