Singapore Lottery: சீட்டு விளையாட்டுகளுக்கு (Lottery) சிங்கப்பூர் ஒரு பிரபல்யமான இடமாகும்! குடியிருப்பவர்கள், வெளிநாட்டினர் என்று பாகுபாடின்றி எல்லாருக்கும் தங்கள் அதிர்ஷ்டத்தை பரிசோதிக்கும் வாய்ப்பை இங்குள்ள சீட்டு விளையாட்டுகள் வழங்குகின்றன.
நீங்கள் ஒரு அனுபவசாலியான Lottery பிரியராக இருந்தாலும் அல்லது புதிதாக இருந்தாலும், சிங்கப்பூரின் Lottery முறையின் விதிமுறைகள், தகுதி மற்றும் பிற அம்சங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.
சீட்டு வாங்குபவர்கள் யார், வரிவிதிப்புகள் பற்றி, வயது கட்டுப்பாடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சிங்கப்பூர் Lottery பற்றிய அனைத்து முக்கியமான தகவல்களையும் இப்போது பார்ப்போம்.
யாரெல்லாம் Singapore Lottery சீட்டுகள் வாங்கலாம்?
குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் உட்பட சிங்கப்பூரில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் சிங்கப்பூர் Lotteryக்கு சீட்டுகள் வாங்கலாம்.
அதாவது, சீட்டு வாங்க நீங்கள் சிங்கப்பூர் குடிமகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிர்ஷ்டத்தை முயற்சிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் உரிய ஒரு விஷயம் இது.
வெளிநாட்டினர் ‘லாட்டரி’ சீட்டுகள் வாங்க முடியுமா?
ஆம், வெளிநாட்டினர் சிங்கப்பூரில் ‘லாட்டரி’ சீட்டுகளை வாங்கலாம். சீட்டை வாங்கும்போது அவர்கள் நாட்டிற்குள் இருந்தால் போதும்.
சிங்கப்பூர் முழுவதும் எளிதாகக் காணக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து சீட்டுகளை வாங்கலாம்.
இருப்பினும், வெளிநாட்டினர் சிங்கப்பூரில் இருக்கும்போதே தாங்கள் வென்றிருக்கும் எந்தப் பரிசையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
ஏனெனில் பரிசுகளை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளும் செயல்முறை இல்லை.
Lottery வரி மற்றும் பிற விஷயங்கள்
சிங்கப்பூர் Lotteryயின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, அனைத்து Lottery வெற்றிகளுக்கும் வரி இல்லை என்பதுதான்.
அதாவது, நீங்கள் எவ்வளவு தொகை வென்றாலும், அது சிறிய பரிசோ அல்லது ஜாக்பாட் ஆக இருந்தாலும், வரி எதுவும் பிடிக்கப்படாமல் முழுப் பணமும் உங்களுக்கே.
Lottery முறையில் பெறப்படும் பரிசுத் தொகைகளுக்கு அதிக வரி விதிக்கும் பிற நாடுகளில் உள்ள லாட்டரிகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு குறிப்பிடத்தக்க நன்மை ஆகும்.
Lotteryக்கான வயது வரம்பு மற்றும் தகுதி
சிங்கப்பூர் Lotteryயில் கலந்துகொள்ள குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
டோட்டோ (TOTO), 4டி (4D), சிங்கப்பூர் ஸ்வீப் (Singapore Sweep) என சிங்கப்பூரில் வழங்கப்படும் அனைத்து வகையான Lotteryகளுக்கும் இந்த வயது எல்லை பொருந்தும்.
ஒரு பொறுப்புள்ள சூதாட்டச் (gambling) சூழலை உறுதி செய்ய விற்பனையாளர்களும் விளையாட்டில் பங்கேற்பவர்களும் இந்த விதியைக் கடைப்பிடிப்பது முக்கியம்.
Lottery சீட்டுகள் வாங்குவதற்கான வரம்புகள்
சிங்கப்பூரில் Lottery சீட்டுகளை வாங்குவது நேர்மையாக நடக்கும் ஒரு செயல் ஆகும். அடிப்படை வரம்புகள் கீழே குறிப்பிடப்படுகிறன:
- உங்களுக்கு குறைந்தது 18 வயது இருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளரிடமிருந்து சீட்டுகளை வாங்க நீங்கள் சிங்கப்பூரில் இருக்க வேண்டும்.
- Lottery சீட்டு வாங்குவதற்கு நடைமுறையில் ID சோதனைகள் நடத்தப்படாவிட்டாலும், பெரிய வெற்றிகளை நீங்கள் பெறும் போது அடையாள அட்டையைக் காட்ட வேண்டியிருக்கும். எனவே, சீட்டு வாங்கும்போது உங்களிடம் எதாவது ஒரு வகை அடையாள அட்டை இருப்பது நல்லது.
சிங்கப்பூரில் Lottery சீட்டுகள் வாங்குவது எப்படி
பிரபல கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சிறப்பு Lottery கடைகள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் சிங்கப்பூரில் Lottery சீட்டுகளை வாங்கலாம்.
நீங்கள் உங்கள் அதிர்ஷ்ட எண்களைத் தேர்வு செய்யலாம் அல்லது ஒரு குவிக் பிக் (Quick Pick) தேர்வு செய்யலாம், அங்கு குலுக்கலில் எண்களை system உங்களுக்காக தானாகவே தேர்ந்தெடுக்கிறது.
டிஜிட்டல் முறைகளை விரும்புபவர்களுக்கு, அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் ஆன்லைனில் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
ஆனால் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் உள்ளூர் குடியிருப்பு முகவரி மற்றும் உள்ளூர் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் Lottery சீட்டுகளை வாங்க என்ன வழி?
நீங்கள் தற்போது இந்தியாவில் இருந்து கொண்டு இதுவரை சிங்கப்பூருக்கு வந்ததில்லை என்றால், சிங்கப்பூர் Lottery சீட்டுகளை இந்தியாவிலிருந்து நேரடியாக வாங்க முடியாது.
ஒரு Lottery சீட்டு வாங்க வேண்டுமானால், அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் சிங்கப்பூரில்தான் நேரடியாக வாங்க வேண்டும்.
இந்தியர்கள் போன்ற வெளிநாட்டினருக்காக, இணையம் மூலம் டிக்கெட்டுகளை விற்கும் சேவை சிங்கப்பூர் Lottery கிடையாது.
சட்டம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஏற்ப இந்த கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. எனவே, ஒழுங்குமுறைகளை தாண்டாமல் இந்த விளையாட்டில் பங்கேற்க வேண்டுமானால் அத்தனை பங்கேற்பாளர்களும் சிங்கப்பூரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
இருந்தாலும், நம் அதிர்ஷ்டத்தை சர்வதேச Lotteryகளில் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உங்களிடம் ஒரு சில ஆப்ஷன்கள் உள்ளன. அதாவது:
1. சில சர்வதேச Lottery சேவை மையங்கள் உலகம் முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்காக சீட்டுகளை வாங்குகின்றன. சிங்கப்பூர் Lottery விதிகளுக்கு ஒத்துப்போகிற மாதிரியும் நம்பகத்தன்மை உள்ள மையத்தை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும்.
2. சிங்கப்பூரில் வசிக்கும் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்காக ஒரு சீட்டை வாங்க முடியும். ஆனால், உங்கள் சீட்டை நிர்வகிக்கும் நபரை நீங்கள் நம்ப வேண்டும், குறிப்பாக ஏதேனும் பரிசு வென்றிருந்தால் அந்தக் காசை (Prize money) வாங்கும் விஷயத்தில் நம்பிக்கை கட்டாயம்!
3. சிங்கப்பூர் Lotteryயில் பங்கேற்பதற்கான மிகவும் நேரடியான மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கக்கூடிய வழி, நீங்கள் சிங்கப்பூருக்குச் செல்லும்போது டிக்கெட் வாங்குவதுதான். இது உள்ளூர் சட்டத் தேவைகளுக்கு நீங்கள் இணங்குவதை உறுதிசெய்கிறது.
Lottery பரிசுத்தொகை எப்படிப் பெறுவது?
வெற்றியாளர்கள் குலுக்கல் நடந்த தேதியிலிருந்து 180 நாட்களுக்குள் தங்கள் பரிசுகளை பெற வேண்டும்.
வென்ற தொகையைப் பொறுத்து அங்கீகரிக்கப்பட்ட கட்டணம் வழங்கும் இடங்களில் பரிசுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
பெரிய வெற்றிகளுக்கு, நீங்கள் பிரதான Lottery அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு வெளிநாட்டினராக இருந்தால், நீங்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேறும் முன் உங்கள் பரிசை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொறுப்புடன் விளையாடுவது கட்டாயம்
சிங்கப்பூர் Lottery என்பது பொறுப்புள்ள சூதாட்ட நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. உங்கள் வசதிக்கு உட்பட்டு மட்டுமே விளையாடுவது முக்கியம்.
மேலும், பணப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண Lottery ஒரு வழியாக கருதப்படக்கூடாது.
Lottery என்பது ஒரு வேடிக்கையான செயல்பாடு ஆகும், அதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும்.