Move to Australia: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு ஆஸ்திரேலியா 2022-ஆம் ஆண்டு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்பட்ட பின்னர், இந்தியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் முடிவை எடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, திறன் வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடுமையான கட்டுப்பாடுகளால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாமல் இருந்தனர்.
அந்த நிலைமை மாறி, வேலைவாய்ப்புகளை தேடி ஏராளமானோர் அங்கு செல்கின்றனர்.
குறிப்பாக இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாகக் குடிபெயர்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு உதாரணத்திற்கு, 2018-19 இல் 33,611 இந்தியர்கள் Permanent Visa பெற்ற நிலையில், 2023-ல் அந்த எண்ணிக்கை 41,145 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், சிங்கப்பூரிலிருந்தும் அதிக அளவில் குடிபெயர்வு நடக்கிறது – 2019-இல் 1,135 சிங்கப்பூரர்கள் பெற்ற நிரந்தர குடியுரிமை, 2023-ல் 1,718 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், குடிபெயரும் நபர்களின் எண்ணிக்கையில் ஏற்றம் கண்டுள்ள ஆஸ்திரேலியா, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் நுழைவு அனுமதிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவுள்ளது.
அதன்படி, மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் (low-skilled) வேலைகள் செய்வோருக்கு ‘விசா’ வழங்குவது கடினமாக்கப்படும்.
இருப்பினும், சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது சிறந்த பணி-வாழ்க்கை சமநிலை மற்றும் குறைந்த வாழ்க்கைச் செலவு போன்ற காரணிகள் ஆஸ்திரேலியாவை விரும்பித் தேர்ந்தெடுக்கும் இடமாக வைக்கின்றன.
புதிய வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு ஆஸ்திரேலியா பொருத்தமான தேர்வாகவே இருக்கிறது.