பிப்ரவரி 9, 2024 அன்று, சிங்கப்பூரின் மத்திய விரைவுச்சாலையில் (Central Expressway) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ஹோண்டா வெஸ் (Veze) கார் ஆகியவை விபத்தில் சிக்கின.
இந்த சம்பவம் அவ்வழியே சென்ற காரின் கேமராவில் பதிவாகியிருந்தது. பின்னர் அந்தக் காணொளி SG Road Vigilante என்ற முகநூல் குழுவில் பகிரப்பட்டது.
இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும் தங்கள் வழித்தடத்தை மாற்ற முயன்றபோது, ஹோண்டா வெஸ் கார் திடீரென்று அவர்கள் பாதையில் குறுக்கிட்டதைக் காணொளி காட்டுகிறது.
இதனால் முதல் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து ஏற்படுகிறது. அந்த அதிர்ச்சியில் இரண்டாவது மோட்டார் சைக்கிளும் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகிறது.
இந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் பார்த்தவர்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பலர் கார் ஓட்டுநரின் திறமையற்ற வாகன இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சிலர், ஒருவேளை வேறொரு வாகனத்தை தவிர்க்கவே கார் ஓட்டுநர் திடீரென வழித்தடத்தை மாற்றியிருக்கலாம், அதுவே இந்த விபத்துக்கு காரணமாகி இருக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.
மேலும், விபத்தில் ஏற்பட்ட காயங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
படம்: Facebook/ SG Road Vigilante