தற்காலத்தில் பலருக்கும் பிடித்த உணவுகளில் பீட்சாவும் ஒன்றாகும். வெளியில் சென்று சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்கள் பீட்சாவை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.
நண்பர்களுடன், குடும்பத்துடன், அல்லது உங்களுக்காக என்று யாருக்காக செய்தாலும், Pizza செய்யும் அனுபவமே ஒரு சுவாரஸ்யமான விஷயமான ஒன்றுதான்.
சமையல் அறையில் இருக்கும் பொருட்களை கொண்டே இந்த எளிய Pizza செய்முறையை பின்பற்றி இந்திய சமையல் பாணியில் பீட்சா தயாரிக்கலாம்.
Homemade Pizza Recipe: தேவையான பொருட்கள்
மாவு தயாரிக்க:
- மைதா மாவு – 2 கப்
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- உப்பு – 1 தேக்கரண்டி
- ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- உலர் ஈஸ்ட் (Dry Yeast) – 1 தேக்கரண்டி
- வெதுவெதுப்பான நீர் – 3/4 கப்
பீட்சாவில் சேர்க்க:
- பீட்சா சாஸ் – 1/2 கப் (வேகவைத்த தக்காளி விழுதை இதற்கு பதிலாக உபயோகிக்கலாம்)
- துருவிய மொஸரெல்லா சீஸ் – 1 கப்
- வெங்காயம் – 1 (மெல்லிய வட்டமாக நறுக்கவும்)
- குடை மிளகாய் – 1 (மெல்லிய வட்டமாக நறுக்கவும்)
- தக்காளி – 1 (விதைகளை நீக்கிவிட்டு மெல்லிய வட்டமாக நறுக்கவும்)
- ஆலிவ், காளான், சோளம், பனீர் – (உங்களது விருப்பத்திற்கு ஏற்ப)
- ஓரிகானோ – 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை – Homemade Pizza Recipe in Tamil
1. மாவை தயார்படுத்திக் கொள்ளுங்கள்
முதலில் மாவைத் தயார் செய்ய வேண்டும். ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா மாவு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
இன்னொரு சிறிய கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் சேர்த்து நன்றாக கரைத்து 5 நிமிடங்கள் வைக்கவும். ஈஸ்ட் நுரை நுரையாக பொங்க ஆரம்பிக்கும்.
இந்த செயல்முறையால் ஈஸ்ட் நன்றாக வேலை செய்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். இது புளிப்பதன் அடையாளம் ஆகும்.
ஈஸ்ட் கரைசல் தயாரானதும், அதை மைதா மாவுடன் ஆலிவ் எண்ணெயும் சேர்த்து நன்றாக பிசையவும். ஒரு தட்டில் சிறிது மாவு தூவி இந்த கலவையை அதன் மேல் வைத்து சுமார் 10 நிமிடங்களுக்கு நன்கு பிசையவும்.
பிசைவதால் மாவிலுள்ள Gluten நன்கு இணையும், இதுவே பீட்சாவுக்கு அந்த மிருதுவான தன்மையை கொடுக்கிறது.
பிசைந்த மாவை நெய் தடவிய கிண்ணத்தில் வைத்து ஈரமான துணியால் மூடி வைக்கவும்.
இந்த மாவை சூடான இடத்தில் வைத்தால் 1 முதல் 2 மணி நேரத்தில் புளித்து ரெடி ஆகிவிடும். அந்த மிருதுவான, பொங்கிய தன்மை பீட்சாவுக்கு சுவையூட்டும்.
2. பீட்சாவிற்கான பொருட்களை தயார் செய்யுங்கள்
மாவு புளிக்கும்போது, நீங்கள் மற்ற பீட்சா பொருட்களை தயார் செய்யலாம். காய்கறிகளை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் அவை எளிதில் வெந்துவிடும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி காரம், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கலாம். இது அவசியமில்லை என்றாலும் பனீருக்கு தனி சுவையூட்டும். இதைத்தவிர நீங்கள் விரும்பும் வேறு பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
3. பீட்சாவை வடிவமைத்துக் கொள்ளுங்கள்
மாவு நன்றாக பொங்கியதும், மெதுவாக ஒரு நவித்து காற்றை வெளியேற்றுங்கள். மீண்டும் தட்டில் சிறிது மாவு தடவி பிசைந்த மாவை வைத்து தடிமனாக உருண்டையாக அல்லது உங்களுக்கு பிடித்த வேறு வடிவத்தில் தேய்த்து தயார் செய்யவும்.
வீட்டில் செய்யும்போது உருண்டை வடிவம் வரவில்லை என்றாலும கவலைப்பட வேண்டாம், ஏனெனில், அது சுவையை அது பாதிக்காது.
இந்த தேய்த்த மாவை எண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும். அதன்மீது பீட்சா சாஸ் பூசி ஒரு சிறிய ஓரம் விடவும்.
அதன் மேல் துருவிய மொஸரெல்லா சீஸ் பாதியளவு தூவுங்கள்.
நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சீராக அடுக்கி, மீதமிருக்கும் சீஸை அதன்மீது தூவவும். சுவைக்காக ஓரிகானோ மற்றும் மிளகாய் தூளை மீது தூவுங்கள்.
4. பீட்சாவை சுட்டுக் கொள்ளுங்கள்
அடுப்பை (oven) 220°C இல் 10 நிமிடங்கள் முன்பே சூடாக்கவும். அதனுள் தயாரித்த பீட்சாவை வைத்து 15-20 நிமிடங்கள் அல்லது ஓரங்கள் பொன்னிறமாக மாறும் வரை சுட்டு எடுக்கவும்.
பீட்சா வெந்ததும் சில நிமிடங்கள் ஆறவிடவும். இதனால் சீஸ் இறுகும், வெட்டுவதற்கு எளிதாக இருக்கும். இறுதியாக, பீட்சாவை துண்டுகளாக வெட்டி இன்னும் சூடாக பரிமாறுங்கள். உங்கள் கைவண்ணத்தை பாராட்ட மறக்காதீர்கள்!
Homemade Pizza Recipe உதவி குறிப்புகள்
- ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள் சாதாரண மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவை உபயோகிக்கலாம்.
- பீட்சா சாஸிற்கு பதில் பெஸ்டோ அல்லது தக்காளி சேர்த்து காரசாரமாக அரைத்த விழுதையும் உபயோகிக்கலாம். புது சுவையை தரும்!
- மொஸரெல்லா சீஸ் பீட்சாவுக்கு சுவையூட்டுகிறது என்பது உண்மை. ஆனால், கூடவே சிறிது செடார் (cheddar) அல்லது பர்மெசான் (Parmesan) சீஸ் தூவினால் இன்னும் அதிக சுவையை தரும்.
- வழக்கமான பெப்பரோனி மட்டுமின்றி, தந்தூரி சிக்கன், பனீர் என வித்தியாசமாக பீட்சாவில் பொருட்களை சேர்த்து புதுவிதமாக புதுமை தயாரிக்கலாம்.
வீட்டிலேயே செய்யும் பீட்சா குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு புது அனுபவத்தைத் தரும்.
சிரிப்பும் கதைகளும் பகிர்ந்து கொள்ள, ஒரு துண்டு பீட்சா போதுமானது. அடுத்த முறை உங்களுக்கு பீட்சா வேண்டும் என்றால், அதை வீட்டிலேயே செய்ய முயற்சி செய்யுங்கள். மேலும், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதை மாற்றியமைக்கலாம்,