மலேசியாவின் பினாங்கு பகுதியில், குறுகிய கால தங்கும் விடுதி ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பெண்ணின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த இளைஞரை போலீசார் நான்கு நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர்.
கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தான் வாடகைக்கு தங்கியிருந்த விடுதியின் குளியலறையில், மிகவும் சிறிய அளவிலான ரகசிய கேமரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பெண் ஒருவர் கண்டுபிடித்து புகார் ஒன்றை அளித்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி வைரலானது.
வழக்கு விசாரணையில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கும் கேமராவைக் கண்டுபிடித்த பெண்ணுக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமரா அந்த இளைஞரின் செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.