சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் S$12 மில்லியன் பரிசுத்தொகையுடன் கூடிய ஹாங்பாவ் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.
டிராகன் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி பிறக்க உள்ள நிலையில், பிப்ரவரி 23-ம் தேதி இந்த லாட்டரி குலுக்கல் நடைபெற உள்ளது.
ஹாங்பாவ் லாட்டரிக்கென தனி இணையதளம் இயங்கி வருகிறது. அதில் அதிர்ஷ்ட எண்களை தேர்ந்தெடுக்க சிறப்பு வசதியும் உள்ளது.
லாட்டரி குலுக்கல் விற்பனை பொதுவாக திங்கள், வியாழக்கிழமைகளில் நடப்பது வழக்கம். ஆனால், இந்த பிரத்யேக லாட்டரி குலுக்கல் வெள்ளிக்கிழமை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டப் பரிசு என்பதால் வழக்கத்தை விட கூடுதல் அவகாசம் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக மாலை 6 மணிக்குள் லாட்டரி சீட்டு விற்பனை நிறுத்தப்படும், ஆனால் பிப்ரவரி 23-ம் தேதி இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
சமீபத்தில் நடந்த மற்றொரு லாட்டரியில் பரிசுத்தொகை S$6 மில்லியன் உயர்ந்தது நினைவிருக்கலாம். அப்போது ஜூரோங் வெஸ்ட்டில் அதிர்ஷ்ட லாட்டரி சீட்டு வாங்கிய ஒரு நபர் அந்த ஜாக்பாட்டை அடித்தார்.