61 வயதான திரு. சண்முகம் அவர்கள் தேக் வாய் லேன், பிளாக் 116 -இல் முன்னர் வசித்து வந்தவர்.
அவர் கடந்த பிப்ரவரி 2, 2024 அன்று காலமானார்.
திரு. சண்முகம் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் யாரேனும் விரைவில் காவல் துறையை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் தெரிவிக்க காவல் துறையின் அவசர உதவி எண்ணான 1800-255-0000 -ஐ தொடர்பு கொள்ள முடியும்.
அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளம் மூலமாகவும் தகவல்களை தெரிவிக்கலாம்.
வழங்கப்படும் அனைத்து தகவல்களும் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என போலீஸ் தரப்பிலிருத்ந்து தெரிவிக்கப்படுகிறது.