கட்டுமானத் தளம் அருகே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
‘It’s Raining Raincoats’ (IRR) என்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு இந்த காணொளியை பதிவிட்டுள்ளது.
சுமார் 38 வினாடிகள் ஓடக்கூடிய இந்தக் காணொளியில், சாலையோரத்தில் பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த தொழிலாளர்கள் தங்கள் கட்டுமானத் தளத்திற்கு வெளியே இருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
அப்போது ஒருவர், நீல நிற பாதுகாப்புத் தலைக்கவசம் அணிந்த தொழிலாளி ஒருவரைத் திடீரெனத் தாக்குகிறார்.
பின்னர் அவர் மற்றொரு தொழிலாளியையும் தாக்குகிறார்.
அந்த சண்டையில் கீழே விழுந்த தலைக்கவசத்தை எடுத்த அந்த நபர் தொழிலாளியை தொடர்ந்து விரட்டிச் சென்று தாக்குவதால் நிலைமை மேலும் மோசமாகிறது.
இதனைப் பார்த்து அதிகத் தொழிலாளர்கள் கூடிவிட, அந்த தாக்குதல் நின்றது.
இந்த சம்பவத்தை ‘இட்ஸ் ரெய்னிங் ரெயின்கோட்ஸ்’ அமைப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இந்த காணொளி எங்கு எடுக்கப்பட்டது, இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் யார் என்பது பற்றிய மேலதிக தகவல்களை அறிய முயற்சிக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 8779 9773 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு, இந்த தாக்குதலுக்கு ஆளான தொழிலாளர்கள் மற்றும் சம்பவம் நடந்த இடம் ஆகியவற்றைக் கண்டறிய உதவுமாறு IRR அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.