2023 இல் சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டுக் குழுவினர்களில் இந்தியர்களுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) கடந்த 2023 ஆம் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நாடுகளிலிருந்து எத்தனை சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர் என்பது பற்றிய சில சுவாரஸ்யமான எண்ணிக்கைகளை வெளியிட்டது.
இந்த பட்டியலில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது! கடந்த ஆண்டு, இந்தோனேசியாவிலிருந்து சுமார் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூர் வந்துள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, சீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, சுமார் 1.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.
இந்தியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து தலா 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
நாடு | சுற்றுலா பயணிகள் (ஆயிரத்தில்) |
---|---|
இந்தோனேசியா | 2,300 |
சீனா | 1,400 |
மலேசியா | 1,100 |
ஆஸ்திரேலியா | 1,100 |
இந்தியா | 1,100 |
பிலிப்பைன்ஸ் | 693 |
அமெரிக்கா | 642 |
தென் கொரியா | 571 |
ஐக்கிய ராஜ்யம் | 474 |
வியட்நாம் | 459 |
செலவு செய்வதைப் பொறுத்தவரை, சீன சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தில் உள்ளனர், S$2.3 பில்லியன் பங்களிப்பு செய்துள்ளனர்.
மேலும், இந்திய சுற்றுலாப் பயணிகளும் தாராளமாக செலவிடுகின்றனர், சுற்றுலாச் செலவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளனர்.