Hindalco Share Price Down: அமெரிக்காவில் Novelis நிறுவனத்தின் Bay Minette திட்டச் செலவுகள் எதிர்பார்ப்பைவிட 65% அதிகரிப்பு, மற்றும் திட்டத்தை முடிப்பதற்கான காலம் ஓராண்டு தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, Hindalco நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீதம் சரிந்தன.
இதோடு, அந்த திட்டத்தில் இருந்து கிடைக்கவிருந்த லாப எதிர்பார்ப்பையும் Novelis குறைத்துக்கொண்டது.
இந்த பின்னடைவுகள் Hindalco பங்கு விலையை கடுமையாக பாதித்தன. ஆனாலும், நிபுணர்கள் இந்தச் சரிவில் இருந்து பங்கின் மதிப்பு உயரும் என கூறுகிறார்கள்.
Kotak Institutional Equities நிறுவன ஆய்வாளர்கள், செலவு உயர்வு மற்றும் தாமதம் அதிகரித்தாலும் 2026 வரையிலான Hindalco நிறுவன வருவாய் கணிப்பு அதிகம் பாதிக்கப்படாது என்று குறிப்பிட்டனர்.
இருந்தபோதும், அடுத்த ஐந்தாண்டுகளில் கம்பெனியின் வளர்ச்சி மற்றும் லாபத்தில் இந்த காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரித்தனர்.
அதேவேளையில், அவர்கள் Hindalco பங்குக்கு நியாயமான விலையாக ரூ. 535 நிர்ணயித்துள்ளனர். இது அந்தப் பங்கின் எதிர்கால வளர்ச்சிக்கான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
JM Financial, Axis Securities போன்ற பிற நிதி ஆய்வு நிறுவனங்களும் ஹிண்டால்கோவின் எதிர்கால லாப வாய்ப்புகள் குறித்து நேர்மறையான பார்வையையே கொண்டுள்ளன.
Bay Minette திட்டச் செலவுகள் அதிகரித்து அதன்மூலம் கிடைக்கும் முதலீட்டு வருவாய் குறையக்கூடும் என்று JM Financial தரப்பில் கூறப்பட்டாலும், திட்டமிட்ட அளவில் உற்பத்தி தொடங்குவது, மறுசுழற்சி முயற்சிகள் மற்றும் செலவின மேலாண்மை ஆகிய காரணங்களால் Hindalcoவின் ஒட்டுமொத்த வருமானத்திற்கு பாதகம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
Axis Securities நிறுவனமோ தனது Price Targetயை உயர்த்தியுள்ளது.
நிதியாண்டின் இறுதியில் வலுவான நிதிநிலை வெளிப்பாடு, நிறுவனத்தின் கடன் சுமை குறைவு என்ற எதிர்பார்ப்பு, அதிக பணப்புழக்கம் ஆகியவை இதற்குக் காரணங்களாக கூறப்படுகின்றன.