இந்த ஆண்டின் டோட்டோ ஹாங்பாவ் (Toto Hong Bao) பரிசுத்தொகையான 12.4 மில்லியன் டாலரை நான்கு அதிர்ஷ்டசாலிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பிப்ரவரி 23ம் தேதி மாலை நடந்த குலுக்கலில் வெற்றி எண்களாக 18, 21, 26, 35, 38, 43 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டன.
கூடுதல் எண்ணாக 40 தெரிவு செய்யப்பட்டது.
வெற்றி பெற்ற குலுக்கல் சீட்டுகளில், இரண்டு சீட்டுகள் ஹவ்காங் மற்றும் ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) கடைகளில் வாங்கப்பட்டவை.
மற்ற இரண்டு வெற்றியாளர்கள் iToto சிஸ்டம் 12 முறையின் மூலம் தங்கள் எண்களை தேர்ந்தெடுத்திருந்தனர்.
பெப்ரவரி 19 முதல் சிறப்பு குலுக்கலுக்கான சீட்டுகளை மக்கள் வாங்க முடிந்தது.
கடந்த ஆண்டு 12 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை மூன்று வெற்றியாளர்கள் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.