Dejana Radanovic India: செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை டெஜானா ரடானோவிக், இந்தியாவைப் பற்றி அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை, உணவு, போக்குவரத்து, தூய்மைச் சீர்கேடுகள் குறித்து இன்ஸ்டாகிராமில் அடுக்கடுக்காக பதிவிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.
உணவில் புழுக்களைக் கண்டதாகவும், தங்கியிருந்த ஹோட்டலில் அழுக்கடைந்த விரிப்புகள் இருந்ததாகவும் கொந்தளித்தார். டென்னிஸ் போட்டிகளில் ஆட இந்தியா வந்திருந்தார் ரடானோவிக்.
இந்தியாவில் குடிநீர் தொடங்கி பழங்கள் வரை சுகாதாரமற்றவை என்றும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தான் தங்கியிருந்த ஹோட்டலில் தோலுரிக்கப்பட்ட பழங்கள் கிடைக்காததால் தெருவில் விற்கப்படும் பழங்களை வாங்கப் பயப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். முன்னர், இந்தியாவில் பழம் சாப்பிட்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவை விட்டுப் புறப்படும்போது ஒரு நாடகத்தனமான பிரியாவிடை செய்தியைப் பதிவிட்டு, மீண்டும் இந்தியா திரும்புவதில்லை என்று சூசகமாக கூறினார்.
பிறகு, ஜெர்மனி சென்றடைந்த ரடானோவிக், மீண்டும் “நாகரிக” உலகிற்கு திரும்பியதாக ஒரு பதிவிட்டது, மக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியது.
I think world no. 253 Dejana Radanovic was made to play in India on gunpoint. Soo much hate. pic.twitter.com/r0zt36tZaO
— Bhosale भोसले (@bhosale1947) February 4, 2024
குறிப்பாக, “நாகரிகமில்லாத“ நாடு என்று இந்தியாவைக் குறிப்பிட்ட அவருடைய பேச்சு இணையத்தில் கடுமையான கண்டனங்களை சந்தித்து வருகிறது.
மோசமான தூய்மைச் சூழல் உள்ள அந்த ஹோட்டலின் பெயரை வெளியிட வேண்டும் என்று சிலரும், ‘Racist’ என்று ஒரு பிரிவினரும் ஆவேசப்பட்டனர். செர்பிய வீராங்கனை மீதான விமர்சனங்கள் அதிகரிக்க,
தான் இனவெறியருடன் பேசவில்லை என்று ரடானோவிக் பதிலளிக்க முயன்றார்.
செர்பியா நாட்டில் உள்ள சில விஷயங்களை ஒருவர் விரும்பாமல் இருந்தால் அதை இனவெறி என்பார்களா ? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பலவற்றை அவர் விமர்சித்திருந்தாலும், குறிப்பாக இந்தியர்களை தான் விரும்புவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.